Sunday, January 25, 2015


என்னை அறிந்தால் படம் ஒரு வழியாக பிப்ரவரி 5ம் தேதி வரும் என அதிகாரப்பூர்வ தகவல் வந்து விட்டது. தமிழகம் முழுவதும் திரையரங்கம் சார்பாக என்னை அறிந்தால்  படம்  பிப்ரவரி 5-ம் தேதி ரிலீஸ் ஆகும் என போஸ்டர்கள் ஓட்டப்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்த அஜித் ரசிகர்கள், டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்துவிட்டனர் என நினைத்து தியேட்டருக்கு சென்று டிக்கெட் கேட்டுள்ளனர். இன்னும் முன்பதிவு ஆரம்பம் ஆகவில்லை என திரையரங்கதினர் அவர்களிடம் கூறியுள்ளனர். ஒரு வழியாக அஜித் ரசிகர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர் திரையரங்கத்தினர்.
இந்நிலையில், நேற்று டுவிட்டரில் என்னை அறிந்தால் படம் 3 மணி நேரத்திற்கு மேலாக ஓடும் என கூறப்பட்டது. சில மணி நேரத்திலேயே இது வெறும் வதந்தி தான், யாரும் நம்ப வேண்டாம் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது வந்த தகவலின் படி படத்தின் ரன்னிங் டைம் ’ படம் 2 மணி நேரம், 32 நிமிடங்கள் தானாம்.

0 comments:

Post a Comment