Thursday, January 22, 2015



தல அஜீத்தின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த 'என்னை அறிந்தால்' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் அந்த படத்தின் தமிழக மற்றும் வெளிநாட்டு தியேட்டர் உரிமைகளின் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றது.

பிரான்ஸ் ,அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் 'என்னை அறிந்தால்' படத்தின் தியேட்டர் உரிமைகள் விற்கப்பட்டு முடிவடைந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள கோவை ஏரியா உரிமை வியாபாரமாகி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கோவையில் விஜய், அஜீத் படங்களை வழக்கமாக வாங்கி வெளியிடும் காஸ்மோ பிலிம்ஸ் நிறுவனம் 'என்னை அறிந்தால்' படத்தின் கோவை உரிமையை ரூ.7.5 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே நிறுவனம் அஜீத்தின் 'ஆரம்பம்' படத்தை ரு.6.9 கோடிக்கு பெற்று நல்ல லாபம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கோவையில் சுமார் 70 தியேட்டர்களில் என்னை அறிந்தால்' படத்தை திரையிட காஸ்மோ பிலிம்ஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment