Saturday, January 24, 2015



கடந்த பொங்கல் தினத்திலேயே ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட கார்த்தியின் 'கொம்பன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் 'கொம்பன்' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்துள்ளது.

மெட்ராஸ் படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் முதல்முறையாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராஜ்கிரண், சூப்பர் சுப்பராயன், கோவை சரளா, கருணாஸ், தம்பி ராமைய்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரவீண் எடிட்டிங் செய்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கார்த்தி நடித்த மூன்றாவது படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், சகுனி ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலை பாடியுள்ளார்.

0 comments:

Post a Comment