'தல அஜீத்துக்கு பின்னால் வரும் பரத்
பரத் நடித்த '555' படத்திற்கு பின்னர் அவர் நடித்த அடுத்த படமான 'கில்லாடி' வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ செய்தி வெளியாகவுள்ளது. ஜனவரி 29ஆம் தேதி அஜீத்தின் என்னை அறிந்தால்' வெளியாகவுள்ள நிலையில் மறுநாள் 'கில்லாடி' வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பரத், நிலா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள கில்லாடி படத்தில் ரோஜா, விவேக், அவினாஷ், டெல்லி கணேஷ், இளவரசு, ஓஏகே சுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். வி.டி.விஜயன் எடிட்டிங் செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்ரீசரவணா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா உரிமையை அபிராமி மெகா ஹால் மற்றும் கோவை உரிமையை ரமணா பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களும் பெற்றுள்ளன.
0 comments:
Post a Comment