அஜீத் படத்தின் சென்சார் தேதி திடீர் மாற்றம்?
அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து சர்டிபிகேட் கொடுப்பார்கள் என செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று 'என்னை அறிந்தால்' திரைப்படம் சென்சார் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
'என்னை அறிந்தால்' படத்திற்கு முன்பே ஒருசில படங்கள் சென்சார் ஆகவேண்டிய நிலையில் இருப்பதாகவும், வரிசைப்படி அந்த படங்கள் சென்சார் செய்யப்பட்டவுடன் 'என்னை அறிந்தால்' சென்சார் செய்யப்படும் என்று சென்சார் அதிகாரிகள் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆயினும் என்னை அறிந்தால் திரைப்படம் நாளைக்குள் சென்சார் செய்யப்பட்டு திட்டமிட்டபடி வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாகும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.
அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அருண்விஜய், விவேக் மற்றும் பலர் நடித்துள்ள
என்னை அரிந்தால்' திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவி, ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment