Saturday, January 24, 2015

துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அறிமுகமாகி தேசிய விருது என்ற உச்சத்தை தொட்ட நடிகர் தனுஷ்,  தமிழ், தெலுங்கும் இந்தி என மூன்று மொழிகளில் இந்திய அளவில் பெரும் புகழ் பெற்று வருகிறார். அவருடைய படங்கள் தொடர்ச்சியாக நீண்ட இடைவெளி இல்லாமல் வந்து கொண்டிருப்பதால் அவருடைய ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

இந்நிலையில் அடுத்தடுத்த மூன்று வாரங்களில் தனுஷின் மூன்று படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என முன்று மொழிகளில் திரையிட உள்ளதால் இந்தியா முழுவதையும் அவர் இன்னும் சில நாட்களுக்கு பேசப்படும் நபராக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஜனவரி 30ஆம் தேதி தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற ஆடுகளம் படத்தின் தெலுங்கு பதிப்பு "பண்டேம்கொல்லு' (PandemKollu) என்ற பெயரில் வெளிவரவுள்ளது. மேலும் பிப்ரவரி 6ஆம் தேதி "ஷமிதாப்" இந்தி படமும், பிப்ரவரி 13ஆம் தேதி "அனேகன்" தமிழ் படமும் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெறும் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு பிரபல நடிகரின் முன்று படங்கள் தொடர்ச்சியாக வெளிவருவதாக இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment