Friday, January 23, 2015


தமிழ் சினிமாவின் என்றும் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் ஃபிளட் டைமண்ட் என்ற ஆங்கில படத்தில் நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அவருக்கு பிறகு அந்த வாய்ப்பு இளைய தளபதி விஜய்யை தேடி வந்துள்ளது. ஜாக்மைக்கேல் மற்றும் ஹரிணி நடிப்பில் அப்சரா ராம்குமார் இயக்கத்தில் வெளிவர உள்ளத் திரைப்படம் 'ஒண்ணுமே புரியல'.
சைக்கலாஜிக்கள் திரில்லர் படமான, இதன் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் ரீமேக் உரிமையை ஐரோப்பிய நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. முதலில் இப்படத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். ஆங்கில ரீமேக்கில் தென்னிந்திய நடிகர் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என அந்நிறுவனம் விரும்புகிறது.
அந்த வகையில் அவர்களின் முதல் சாய்ஸ் விஜய் தானாம். இதற்கு விஜய் சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment