சீனியர் ஹீரோவுடன் நடிக்க ஸ்ருதி மறுப்பு
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன், தெலுங்கு படவுலகின் சீனியர் நடிகர் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக ஒருசில இணையதளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த தகவலை ஸ்ருதிஹாசன் தற்போது மறுத்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது, 'சீனியர் நடிகர் வெங்கடேஷுக்கு ஜோடியாக நான் நடிக்கவுள்ளதாக வெளிவந்த தகவல் முற்றிலும் பொய்யானது. நான் வெங்கடேஷ் உள்பட எந்த ஒரு சீனியர் நடிகருக்கும் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகவில்லை' என்று கூறியுள்ளார்.
தற்போதைய முன்னணி நடிகைகள் சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க மறுத்து வரும் நிலையில் ஸ்ருதிஹாசனும் அதே முடிவை எடுத்துள்ளதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. வாய்ப்புகள் இல்லாத முன்னாள் ஹீரோயின்கள் மட்டுமே சீனியர் நடிகர்களோடு ஜோடி சேர சம்மதம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment