Wednesday, January 21, 2015

 நான் கிளாமர் டிரஸ் போடக்கூடாதா?  ரசிகர்களை காய்ச்சி எடுத்த கனிகா

பைவ் ஸ்டார், வரலாறு, பழஸிராஜா படங்களில் நடித்திருப்பவர் கனிகா. திருமணத்துக்கு பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது தோழிகளுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றார். ஷார்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸுடன் கடற்கரையில் சுற்றிதிரிவதை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டார். வழக்கமாக எந்த படத்தை இணையதள பக்கத்தில் வெளியிட்டாலும் உடனே நூற்றுக்கணக்கில் லைக் கொடுப்பவர்கள் உண்டு. ஆனால் கனிகாவின் இந்த கவர்ச்சி தோற்றத்தை கண்ட ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஒரு குழந்தைக்கு அம்மா ஆனபிறகும் இதுபோல் டிரஸ் அணிவது முறையல்ல என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த விமர்சனங்கள் கனிகா மனதை பாதித்தது. எதிர்கருத்து வெளியிட்ட ரசிகர்கள் மீது அவர் இணைய தள பக்கத்திலேயே பாய்ந்திருக்கிறார். ‘நீங்க ரொம்ப நல்ல பொண்ணு என்று நினைத்திருந்தோம். ஆனால் நீங்கள் அணிந்திருக்கும் உடையை பார்க்கும்போது கெட்டபெண் ஆகிவிட்டதுபோல் தெரிகிறது. ஒரு குழந்தைக்கு அம்மா ஆனபிறகும் இந்த வயதில் இப்படி உடை அணிவது வெட்கமாக இல்லையா?‘ என்கிறார்கள். இதுபோன்ற உடை எந்த வயதுவரை எனக்கு வசதியாக இருக்கிறதோ அதுவரை அணிவேன். 50 வயதில்கூட இப்படி நான் டிரஸ் செய்துகொள்வேன். கடற்கரையில் நான் தோழிகளுடன் பொழுதை கழித்தேன் அங்குகூட சேலை அணிந்துகொண்டா செல்ல முடியும். எனக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். அவன் வளரும்போது உடையை வைத்து பெண்ணை எடைபோடும் குறுக்கு புத்திக்காரர்கள்போல் இல்லாமல் திறந்த மனதுடன் வளர்வான்'  என பொறிந்து தள்ளினார் கன¤கா.
- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=15207&id1=3#sthash.KX6WkasQ.dpuf

0 comments:

Post a Comment