Saturday, January 24, 2015



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' திரைப்படத்திற்காக நஷ்ட ஈடு கேட்டு கடந்த 10ஆம் தேதி திருச்சி-தஞ்சை ஏரியா விநியோகிஸ்தர் சிங்காரவேலன் தலைமையில் ஒருசில விநியோகிஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்ததை அடுத்து மீண்டும் உண்ணாவிரதம் இருக்க போலீஸாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீஸார் அனுமதி தராததால் விநியோகிஸ்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது போலீஸார் தரப்பில் இருந்து விளக்கம் அளித்தபோது 'இதே பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்க ஏற்கனவே ஒருமுறை அனுமதி கொடுத்துவிட்டதால் மீண்டும் அனுமதி தர முடியாது என்று மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. போலீஸாரின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி லிங்கா விநியோகிஸ்தர்களின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் லிங்கா படத்தின் வசூலை விநியோகிஸ்தர்களே நெகட்டிவ் செய்தியை பரப்பி கெடுத்துவிட்டதால் நஷ்ட ஈடு தரமுடியாது என்று தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஏற்கனவே தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment