Tuesday, January 27, 2015

Yennai Arindhaal Movie Gallery
அஜீத், த்ரிஷா, அனுஷ்கா, அருண்விஜய், விவேக் மற்றும் பலர் நடித்துள்ள 'என்னை அறிந்தால்' படம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸாகும் என்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் மிகவிரைவில் இயக்கவுள்ளதாக கவுதம் மேனன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த படத்தில் அஜீத்தின் கேரக்டரான சத்யதேவ் மக்கள் மனதில் ஆழமாக பதியும் என தான் நம்புவதாகவும், அவ்வாறு நான் நினைத்தபடி வெற்றிபெற்றால், அஜீத் மற்றும் ஏ.எம்.ரத்னம் அவர்களின் அனுமதியுடன் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கும் திட்டம் உள்ளதாகவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்கள் கூறும்போது, 'இந்த படத்தில் அஜீத்துக்கு சமமான ஒரு கேரக்டரில் அருண்விஜய் நடித்திருப்பதாகவும், முதலில் இவ்வளவு அழுத்தமான கேரக்டரை அருண்விஜய் செய்வாரா என்பதில் தான் சந்தேகம் கொண்டதாகவும், ஆனால் கவுதம் மேனன் மிகுந்த நம்பிக்கையில் அருண்விஜய் இந்த கேரக்டரை கண்டிப்பாக நன்றாக செய்வார் என நம்பிக்கை கொடுத்ததால் தான் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். இந்த படத்தில் அருண்விஜய்யின் நடிப்பை பார்த்த பின்னர் கவும்தம் மேனனின் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதை தெரிந்துகொண்டதாகவும் மேலும் அவர் கூறினார்.

0 comments:

Post a Comment