Wednesday, January 21, 2015



தனுஷ், அம்ரியா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள 'அனேகன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அனேகன் வெளியாகும் அடுத்த தினத்தில் அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் கேப்டன் மகன் சண்முகப்பாண்டியனின் 'சகாப்தம்' திரைப்படம் வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சுரேந்திரன் இயக்கத்தில், கார்த்திக் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள 'சகாப்தம்' திரைபடத்தில் சண்முகப்பாண்டியன், நேஹா, சுப்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர், மலேசியா பாங்காக் போன்ற வெளிநாடுகளில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் தன் வாரிசு நடிக்கும் முதல் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு அவரே முன்னின்று படப்பிடிப்பையும், கதையமைப்பையும் கவனித்து உள்ளார்.இம்மாதம் 30ஆம் தேதி சென்னை வடபழநியில் உள்ள கிரீன்பார்க் ஓட்டலில் நடைபெற இருக்கும் பாடல் வெளியீட்டு விழாவில் இளையதலைமுறை நடிகர்கள் பலர் கலந்து கொண்டு சண்முகப்பாண்டியனை வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிம்பு,ரம்யா நம்பீசன், ஆண்ட்ரியா ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment