இந்திய குடியரசு தின விழாவுக்கு வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிசேல் ஒபாமா ஆகிய இருவருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி வரும் 26ஆம் தேதி பரோடா நகரில் நடைபெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் தனக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த வெள்ளை மாளிகை நிர்வாகிகளுக்கு அவர் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான் வெள்ளை மாளிகைக்கு சென்றிருந்த போது அங்கு ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதிபர் ஒபாமா மற்றும் மிச்சேல் ஒபாமாவின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மானின் அழைப்பை ஏற்று ஒபாமா பரோடா வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

0 comments:
Post a Comment