Tuesday, January 27, 2015

தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய விஷால் படங்களை இயக்கிய இயக்குனர் திரு, புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை த்ரிஷாவின் வருங்கால கணவர் வருண்மணியன் அவர்களுடன் இணைந்து சூசந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜன் ஆகியோர் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எஸ்.தமன் இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கலை இயக்குனராக ஜாக்கியும், நிரஞ்சனி காஸ்ட்யூம் டிசைனராகவும், அந்தோணி எடிட்டராகவும் இந்த படத்திற்காக பணிபுரிய உள்ளனர். இந்த படத்தின் ஹீரோயின் உள்பட மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment