பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 'பத்மபூஷன்' விருது வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினவிழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து மொத்தம் 148 கலைஞர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும், இதில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பெற்ற ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் தவிர முன்னாள் துணை பிரதமர் எல்.கேஅத்வானி, பாபா ராம்தேவி, ரவிஷங்கர், அமிதாப்பச்சன் ஆகியோர்களும் பத்ம விருதுகள் பெறும் முக்கியமானவர்கள் ஆகும்.
மேலும் பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, சல்மான்கானின் தந்தை சலீம்கான், ஆகியோர்களும் பத்ம விருது பெறுபவர்களின் லிஸ்ட்டில் உள்ளனர்.
0 comments:
Post a Comment