இளம்பெண்ணை பார்த்து கண்ணடித்த விஜய் தந்தை
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ள 'டூரிங் டாக்கீஸ்' திரைப்படம் வரும் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் வேலையை எஸ்.ஏ.சந்திரசேகர் விறுவிறுப்பாக செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் அனிமேஷன் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அனிமேஷன் டீசரில் எஸ்.ஏ.சி இளவயது உடை அணிந்து காதல் ரோஜா ஒன்றை கையில் பிடித்தவாறு ஒரு காம்பவுண்ட் சுவரை தாண்டி குதிக்கிறார். அங்கு நீச்சலுடையில் படுத்திருக்கும் ஒரு பெண்ணுக்கு ரோஜாவை கொடுக்கின்றார். அந்த ரோஜாவை பெற்றுக்கொண்ட பெண், எஸ்.ஏ.சியை பார்த்து கண்ணடிப்பதுடன் இந்த டீசர் முடிவடைகிறது.
வெறும் 28 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த டீசருக்கு கலவையான விமர்சனங்கள் இண்டர்நெட்டில் உலவி வருகிறது. பெரும்பாலான இணையவாசிகள் எஸ்.ஏ.சியை கேலி செய்து கிண்டலான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment