Saturday, January 31, 2015

அஜீத்துக்கும் விஜய்க்கும் நான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்றது தவறு. அவர்கள்தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார்கள் என்று இயக்குநர் - நடிகர் எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார். எஸ் ஜே சூர்யாவின் இயக்கத்தில் அவரே நடித்து இசையமைத்து வந்துள்ள லேட்டஸ்ட் படம் இசை.

படம் வெளியானது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், அஜீத், விஜய் பற்றியும் கூறியுள்ளார். அதில், "எல்லாரும் அஜித், விஜய்க்கு நான் லைஃப் கொடுத்ததா சொல்றாங்க. எனக்குதான் அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கை குடுத்துருக்காங்க. அதுலயும் விஜய் அவ்ளோ பெரிய ஹீரோ... இன்னும் எனக்காக அவர் மனசுல இவ்ளோ பெரிய இடம் கொடுத்திருப்பார்னு நான் நெனைக்கவே இல்ல. 


இத்தனை வருஷம் கழிச்சு ஒரே வார்த்தைல நான் 10 வருஷம் சினிமாவுல இல்லைங்கறத மக்கள் மறக்குற மாதிரி செஞ்சுட்டாரு. நான் கடந்து வந்த பாதைக்கு முதல் விதை போட்டவரு அஜித். நல்ல மனுஷன் இப்போ கொஞ்சம் நாளா தன்ன தனிமை படுத்திட்டாரு. அவரு போன் கூட யூஸ் பண்றதில்லை. மெயில் அனுப்பியிருக்கேன் என்னோட டிரெய்லர அஜித் பாத்துருப்பாருன்னு நம்பறேன்," என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment