Thursday, January 22, 2015


அஜித் ரசிகர்களுக்கு விஜய் வைக்க போகும் செக்? - Cineulagam

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அஜித், விஜய் தான். இவர்கள் படங்கள் வந்தாலே திரையரங்குகளில் திருவிழா தான்.

அந்த வகையில் இவர்கள் போட்டி திரையரங்குடன் இல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் தொடர்கிறது. ஆனால், இந்த போட்டி ரசிகர்களிடையே தான் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.
விஜய் அவர்களுடன் சண்டை போட வேண்டாம் என்று தன் ரசிகர்களை கூறினார். ஆனால், அஜித் ரசிகர்கள் விடுவதாக இல்லை, இதற்கு பதிலடி கொடுக்க விஜய் ரசிகர்கள் மீண்டும் சண்டையில் குதித்தனர்.

இதை பொறுமையாக பார்த்த விஜய், தற்போது தன்னை கிண்டல் செய்பவர்களை சமூக வலைத்தளங்களில் கண்காணிக்க முடிவு செய்துள்ளாராம், அதே போல் அஜித்தை கிண்டல் செய்யும் தன் ரசிகர்களையும் நோட்டமிட முடிவெடுத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment