
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு குறித்து சமந்தா பதிவு செய்த சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றின் காரணமாக சமந்தா மீது மகேஷ்பாபு ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் தாக்குதல் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக மகேஷ்பாபுவும் சமந்தா மீது வருத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பழைய கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு, சமந்தாவின் சர்ச்சைக்குரிய செயலையும் மன்னித்துவிட்டு, மீண்டும் சமந்தாவுடன் ஜோடி சேர மகேஷ்பாபு ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் விசாகப்பட்டினம் புயல் நிவாரண நிதிக்காக நடைபெற்றை 'மெமு சைதம்' நிகழ்ச்சியிலேயே மகேஷ்பாபு மற்றும் சமந்தா ஒன்று சேர்ந்துவிட்டதாக கூறப்பட்டது.
ஏற்கனவே இரண்டு படங்களில் வெற்றிகரமான மற்றும் ராசியான ஜோடி என்ற பெயரெடுத்த மகேஷ்பாபு-சமந்தா ஜோடியை மூன்றாவது முறையாக இணைக்கவுள்ளவர் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் என்ற செய்தி பரவி வருகிறது.
கே.ராதாகிருஷ்ணன் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். இவர் ஏற்கனவே திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இரண்டு படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment