Tuesday, January 27, 2015

Adah Sharma Cute Gallery
வரும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள அஜீத்தின் 'என்னை அறிந்தால்' கிளைமாக்ஸ் குறித்து அஜீத் ரசிகர்கள் பல்வேறு ஸ்டேட்டஸ்களை சமூக வலைத்தளங்களில் இன்று காலை முதல் பதிவு செய்து வருகின்றனர்.

முதலில் 'என்னை அறிந்தால்' படத்தின் கிளைமாக்ஸில் அஜீத் இறந்துவிடுவதுபோல கவுதம் மேனன் வைத்திருந்ததாகவும், அதன்பின்னர் அஜீத்தின் வேண்டுகோளை ஏற்று கிளைமாக்ஸை மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் தான் கடந்த 1991ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கி வெளிவந்த 'தளபதி' படத்திலும் ரஜினி முதலில் இறந்துவிடுவதுபோல கிளைமாக்ஸ் வைத்து அதன்பின்னர் ரஜினி உயிரோடு இருப்பதை போல கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது.

தற்போது தளபதி போலவே 'என்னை அறிந்தால்' படத்தின் கிளைமாக்ஸும் மாற்றப்பட்டுள்ளதால், செண்டிமெண்டாக அந்த படம் பெற்ற வெற்றியை இந்த படமும் பெறும் என்று அஜீத் ரசிகர்கள் ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர்.

என்னை அறிந்தால் இன்னொரு தளபதியாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment