கடந்த வருடம் தமிழில் மூன்றும் மற்றும் மலையாளத்தில் வெளியான அவதாரம் உட்பட மொத்தம் நான்கு படங்களில் நடித்த லட்சுமி மேனன் இந்த வருடத்தில் புதிய படங்கள் எதுவுமே ஒப்புக்கொள்ளவில்லை.
தற்போது அவர் கார்த்தியுடன் நடித்துள்ள கொம்பன் படம் கூட போன வருடமே ஒப்பந்தமானதுதான். அதுமட்டுமல்லாமல், கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்த சிப்பாய் வெளிவருமா, வராதா என தெரியாமல் கிடப்பில் கிடக்கிறது.
இந்த நிலையில் லட்சுமி மேனன் புதிய படங்களை ஒப்புக்கொள்ளாததற்கு காரணம் அவர் இந்த வருடம் பிளஸ்-டூ தேர்வு எழுதுவதற்காக தயாராகிக் கொண்டிருப்பதுதான்.
இப்போது அதற்கான மாதிரி தேர்வுகள் நடப்பதால் அதில் தனது கவனத்தை செலுத்தி வரும் லட்சுமி மேனன் தேர்வுகள் முடிந்ததும் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவார் என தெரிகிறது.
Saturday, January 24, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment