Wednesday, January 28, 2015

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் என்னை அறிந்தால். இப்படம் வருகிற பிப்ரவரி 5ம் தேதி வெளியாகிறது. சமீபகாலமாக இப்படம் குறித்து சர்ச்சையான செய்திகள் இணையத்தில் வெளியாகிவந்தன. படத்தின் இறுதிக் காட்சியில் அஜீத்திற்கு உடன்பாடில்லை என்றும், அதனால் கௌதம் மேனனிடம் மன கசப்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், என்னை அறிந்தால் படம் ஒரு மனிதனின் வாழ்க்கை பயணம். தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. தெலுங்கில் இந்த படம் ‘எந்தவாடுகாணி' என்று பெயரில் வெளியாகிறது. இப்படத்தில் நிறைய பஞ்ச் வசனங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை மிகையாக இருப்பதாக அஜீத் கருதியதால் பஞ்ச் வசனங்கள் குறைக்கப்பட்டன.  இப்படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்படவில்லை. படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் வகையில் படத்தின் முடிவு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment