விஜய் நடித்து வரும் 58வது திரைப்படமான 'புலி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் 59' குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
விஜய் 59' படத்தை 'ராஜா ராணி' இயக்குனர் அட்லி இயக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதியதாக தலைவர் பொறுப்பேற்றிருக்கும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ள இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த செய்திதான் தற்போது இணையத்தை ஆட்டுவித்து கொண்டிருக்கின்றது.
முதலில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா, பின்னர் தனது பிசியான ஷெட்யூல்ட் காரணமாக இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தீபிகா ஏற்கனவே புலி படத்திற்கே விஜய் ஜோடியாக நடிக்க பேசப்பட்டார். ஆனால் திடீரென ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டனர்.
இந்நிலையில் 'லிங்கா' நாயகி சோனாக்ஷி சின்ஹாவிடமும் விஜய் 59 படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. தீபிகா, சோனாக்ஷி இருவரில் யார் விஜய்க்கு ஜோடி சேரவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவர்கள் இருவருமே ரஜினியின் முந்தைய கதாநாயகிகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment