நெப்போலியன் - குஷ்பு நேருக்கு நேர் மோதல்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நின்ற தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் சமிபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
அதிமுக, மற்றும் திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை குஷ்புவும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடிகர் நெப்போலியனும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இருவருமே சமீபத்தில்தான் காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இணைந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் பலவீனமாக உள்ள இந்த இரு தேசிய கட்சிகளும் சினிமா பிரபலங்களை நிறுத்தி தங்கள் கட்சிக்கு வலு சேர்க்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

0 comments:
Post a Comment