Wednesday, January 21, 2015

   அசின் உடல் எடையால் ஷூட்டிங் பாதிப்பு

அசின் உடல் எடை அதிகரித்துவிட்டதால் அவர் நடிக்கும் ‘ஆல் ஈஸ் வெல்‘ இந்தி பட ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதுபற்றி பட குழுவினர் கூறும்போது,‘பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டதற்கு காரணம் இதன் படப்பிடிப்பை பொங்கல் தினத்தில் தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான். அன்றைய தினம் இதன் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. அபிஷேக் பச்சனுடன் அசின் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. மேலும் ஸ்மிருதி இரானியுடன் அசின் நடித்த காட்சிகள் ரீ ஷூட் செய்யப்பட்டது. இதில் சுப்ரியா பதக்குடன் அசின் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதுÕ என்றனர். அசின் உடல் எடை பற்றி எதுவும் கூறாமல் இப்படி மழுப்பலாக பதில் சொன்னது படக்குழு.

0 comments:

Post a Comment