நிஜத்திலும் சரி, படத்திலும் சரி பெரிய ஹீரோக்கள் முதல் சின்ன நடிகர்கள் வரை அனைவரையும் கலாய்க்கும் உரிமை காமெடி நடிகர் சந்தானத்திற்கு மட்டுமே உண்டு என கோலிவுட்டில் கூறுவதுண்டு. நகைச்சுவையாக அவர் கலாய்ப்பதை இளையதலைமுறை நடிகர்களும் நடிகைகளும் பெரிதும் ரசிப்பதுண்டு. ஆனால் சந்தானத்தையே கலாய்த்து டார்ச்சர் செய்யும் ஒரு நடிகர் இருக்கின்றாராம். அவர் தான் ஆர்யா.
காலையில் நான்கு மணிக்கே சந்தானத்தின் வீட்டின் கதவை தட்டி 'வா சைக்கிளில் ஒரு ரவுண்ட் போகலாம்' என்று கூப்பிட்டு அப்படியே மகாபலிபுரம் வரை எம்.ராஜேஷின் 'VSOP' படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சந்தானத்தை கூட்டி சென்றுவிடுவாராம் ஆர்யா
அதன்பின்னர் மீண்டும் படப்பிடிப்பு முடிந்ததும் இரவில் சைக்கிளிலேயே இருவரும் வீடு திரும்புவதாக சந்தானம் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் ரஜினி உள்பட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துவிட்டாலும் இன்னும் கமல் படத்தில் மட்டும் நடிக்கவில்லை என்ற ஏக்கம் இருப்பதாகவும், அதுவும் விரைவில் நிறைவேறும் என்று தான் நம்புவதாகவும் சந்தானம் அதே பேட்டியில் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment