Saturday, January 31, 2015

அஜித்தை தவிர விஜய், சூர்யா,  சிம்பு, ஸ்ருதி வரை செல்பி கலாட்டா! - Cineulagam


தற்போதைய சமூகத்தில் எல்லோரும் ஸ்மார்ட் ஆக இருப்பதை விட ஸ்மார்ட் போன் வைத்திருக்கவே விரும்புகிறார்கள். அதிலும் பல பேர் செல்பி போட்டோ எடுப்பதற்காகவே வீட்டில் இருக்கும் பண்ட பாத்திரத்தை அடகு வைத்து வாங்கி விடுகிறார்கள்.
காலையில் எழுந்து காபி குடிப்பதில் ஆரம்பித்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை செல்பி எடுத்து அட்ராசிட்டி செய்கின்றனர் இந்த யூத் பாய்ஸும், ஒயிட் ஸ்கீன் கேர்ள்ஸும். நம் முகத்தை நாமே பார்த்து எடுக்கும் ஒரு போட்டோ தான் செல்பி, நோக்கியா போனில் கேமராவை திருப்பி அந்த காலத்திலேயே ஸ்டைல் போஸ் கொடுத்தவங்க நாம, ஆனா என்ன பண்றது வெள்ளக்காரன் என்ன பண்றானோ அது பின்னாடி தான நம்ம ஓடுவோம். அந்த வகையில் ஆஸ்கர் மேடையில் அரங்கேறிய இந்த செல்பி நம் ஊர் ஆண்டிப்பட்டி வரை விட்டு வைக்க வில்லை.
அதிலும் குறிப்பாக நம் திரைப்பிரபலங்கள் செல்பி எடுத்து நெட்டில் தட்ட, அது வைரலாகி சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் உங்கள் மனம் கவர்ந்த நடிகர்களின் செல்பி போட்டோவின் தொகுப்பு தான் இந்த பகுதி.
த்ரிஷா வீட்டு செல்பி
ஷப்பாடா..எப்படியோ த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்திற்கு ரெடியாகிவிட்டார். ஆனால், பார்ட்டி இல்லாமல் த்ரிஷா எப்படியிருப்பார். அவர் வைத்த பார்ட்டியில் கலந்து கொண்டு செல்பி போஸ் கொடுத்த நம்ம தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, உதயநிதி, சீனியர் ராதிகா மேடம்.
பாசமலர்கள் செல்பி
தமிழ் சினிமாவின் கலைஞானியின் கலை வாரிசுகள் தான் ஸ்ருதி, அக்‌ஷரா. தற்போது இருவரும் நடிக்க வந்து விட்டனர். இதில் தங்கை மீது அதிக பாசம் கொண்டவர் ஸ்ருதி. அவருடன் ஒரு ஜாலி க்ளிக் தான் இந்த செல்பி.
மிரட்டல்+கூல் செல்பி
அனிருத் செல்பி என்றாலே தன் முகத்தில் அவன் இவன் விஷாலை வர வைத்து விடுவார். அந்த அளவிற்கு முகத்தில் ஒரு எக்ஸ்பிரஷனுடன், தன் தோழி ஸ்ருதியுடன் ஒரு மிரட்டல்+கூல் செல்பி.
மாஸ் செல்பி
சிங்கம் அடுத்த வேட்டைக்கு தயார் என்ற நிலையில் மாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தது. அதன் பிறகு இப்படத்தை பற்றி தகவல்கள் வராத நிலையில் அவ்வப்போது வெங்கட் பிரபு தன் குழுவினர்களுடன் ரசிகர்களுக்கு அளிக்கும் பரிசு தான் இந்த மாஸ் செல்பி.
சீனியர், ஜுனியர் செல்பி
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்யை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அனைவருக்கும் இவர் தான் செல்லப்பிள்ளை. அதிலும் தனுஷ், விஜய் இருவரும் க்ளோஸ் ப்ரண்ட்ஸ். அதன் வெளிப்பாடு தான் இந்த செல்பி.
நாங்க நண்பர்கள் தான் சொல்லும் செல்பி
விஜய்-அஜித் சண்டை ஓயாத நிலையில் ஆரம்பித்தது தான் சிம்பு-தனுஷ். ஆனால், பிரச்சனையை முதலிலே கிள்ளி எறிய முடிவெடுத்து சிம்பு, தனுஷும் பல இடங்களில் கைகோர்த்து உலா வருகின்றனர். அதில் தான் இந்த ஷார்ப் லுக் செல்பி
பாலிவுட் பாஷாவுடன் ஹன்சிகா
ஷாருக்...பெயரை சொன்னாலே போதும் பெண்கள் மனதில் 1000 வால்ட் பல்ப் எறிய, நம்ம ஊர் பசங்கள் வயிற்றில் எரிச்சல் தான். ஒரு விருது விழாவிற்கு வந்த ஷாருக்கை மடக்கி பிடித்து ஒரு செல்பி எடுத்து விட்டார் நம்ம ஹன்சிகா.
சர்ச்சை செல்பி
காதலர்கள் பிரிந்தால் மீண்டும் ஒன்று சேர கூடாது என்று ஈ.பி.கோ செக்‌ஷனில் ரூல்ஸ் இருக்கா என்ன? அப்படி தன் பழைய காதலியுடன் சிம்பு இணைந்து நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் தான் இந்த செல்பி. ஆனால், இது வெளிவந்த உடன் மீண்டும் லவ் என்று செய்தி பற்றி எறிய ஆரம்பித்தது.
சாதனையாளர்கள் செல்பி
இதை பார்க்க கோடி கண்கள் வேண்டும், அப்படி ஒரு செல்பி இது. தமிழகத்தில் முன்னணி தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்குடன் நம் திரையுலக ஜாம்பவான்கள், கமல், ரகுமான், ஷங்கர், விஜய், சூர்யாவுடன் நம்ம டிடி இந்த போட்டோவை க்ளிக் செய்து முடிப்பதற்குள் சமூக வலைத்தளங்களில் வைரல் தொற்றி விட்டது.
இந்த செல்பி கலாச்சாரத்தில் சிக்காத ஒரே ஆள் யார் என்றால் தல அஜித் மட்டும் தான். இதுவரை இவருடன் யாரும் நிற்பது போல் அல்லது அவரே எடுத்து கொண்ட செல்பி என ஏதும் இல்லை.

3 comments:

  1. ஏன்டா தல தலன்ணு அலையிறிய கிருக்கு பயபள்ளையலா. அவங்க செல்பி எடக்கறாங்க செருப்பு எடுக்குறாங்க. ஒங்கவேலைய பாருங்கடா லூசு ரசிகர்பசங்களா

    ReplyDelete