
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா பெயரில் பேஸ்புக்கில் பக்கம் ஒன்று திறக்கப்பட்டதாக செய்திகள் வந்தது. இது சூர்யாவின் பக்கம்தான் என்று எண்ணி பல்வேறு ரசிகர்களும் அந்த பக்கத்தை லைக் செய்தனர்.
ஆனால், இந்த பக்கம் போலியானது என்று அங்கீகரிக்கப்பட்ட சூர்யா ரசிகர் மன்றம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும், சூர்யா, இதுவரை சமூக வலைத்தளங்களான பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் இணையவில்லை என்றும், தற்போது பேஸ்புக்கில் சூர்யா பெயரில் பக்கம் வெளியானது போலியானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட பக்கத்தை தொடங்கியவர் மீது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதறகுப் பிறகு விக்ரம் இயக்கத்தில் 24 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
0 comments:
Post a Comment