பொங்கல் தினத்தில் ரிலீஸாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'டார்லிங்' படத்தில் பேயாக தன்னுடைய அபார நடிப்பை வெளிப்படுத்திய நிகில் கல்ராணி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பேய் என்றால் மிகுந்த பயம் என்றும், பேயை இதுவரை தான் பார்த்ததில்லை என்றும் அப்படியே பார்த்தாலும் அதை வெளியே சொலதற்கு உயிருடன் இருப்பேனே என்று தெரியாது என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஒருசில தெலுங்கு படங்களில் நடித்துள்ள நிகில்கல்ராணியின் சகோதரி சஞ்சனாவும் ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 50 விளம்பரப்படங்களுக்கும் மேல் நடித்துள்ள நிகில் கல்ராணி, கார்த்தி நடித்த 'பையா' படத்தின் கன்னட ரீமேக்கான 'அஜீத்' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தமிழ்ப்படத்திலேயே பேயாக நடித்தது குறித்து கூறியுள்ள நிகில் கல்ராணி, 'பேய் கேரக்டருக்கும் மற்ற கேரக்டருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் மேக்கப் மட்டும்தான். மற்ற கேரக்டரில் அழகாக வரும் நான், பேய் கேரக்டரில் அகோரமாக வருகிறேன். ஆனால் படம் முழுவதும் உலா வரும் கேரக்டர் என்பதால் இந்த படத்தில் மிகவும் ஆர்வத்துடன் நடித்தேன்' என்று கூறியுள்ளார். தற்போது யாகாவராயினும் நா காக்க' என்ற படத்ஹ்டில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருவதாகவும், டார்லிங்' படத்தில் பேயாக தன்னை பார்த்த தமிழ் ரசிகர்கள் இந்த படத்தில் அழகான என் கேரக்டரை பார்த்து ரசிப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறியுள்ளார். |
Friday, January 23, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment