Monday, January 19, 2015

ஆங்கில படத்தின் சாயலா அனேகன்? - Cineulagam
தனுஷ் நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கி வரும் திரைப்படம் அனேகன். வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் இப்படம் வெளிவரயிருப்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி இருந்தன. தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான அத்தனை டியூன்களும் அனேகன் பட பாடல்களில் காணலாம் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படம் ஜாக்கிஜான், மல்லிகா ஷெராவத் இணைந்து நடித்த தி மித் படத்தின் சாயல் என்று கூறுகின்றனர். அந்த படத்தில் முன்பிறவியில் செய்தது அடுத்த பிறவியில் ஞாபகம் வைத்து கொள்வதுபோல் இருக்குமாம். அதேபோல் அனேகன் படத்தின் கதையும் இருப்பதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment