Tuesday, January 20, 2015



கிசுகிசுக்களில் அதிகம் விழுகிறவர் ராய் லட்சுமி. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கேப்டன் டோனி, ராகவா லாரன்ஸ். பெங்களூரு அரசியல்வாதி, இப்படி இவருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர்கள் பட்டியல் நீளமானது. ஆனால் இப்போது காதலில் இருந்து விலகி சினிமாவில் கவனம் செலுத்துகிறாராம் ராய் லட்சுமி.  "எல்லா பொண்ணுங்களுக்கும் காதல் வர்ற மாதிரி எனக்கும் வந்திருக்கு. ஃபிரண்ட்ஷிப்ல ஆரம்பிச்சு அது லவ்வா கன்வெர்ட் ஆகுற நேரத்துல நான் சுதாரிச்சிட்டிருக்கேன்.

ஒருத்தரை மட்டும் சீரியசா காதலிச்சேன். அவரும் என்னைக் காதலிச்சார். ஆனா இப்போ பிரிஞ்சுட்டோம். அதுக்கான காரணம் மற்றவங்களுக்கு தெரிய வேண்டாம். இப்போ நான் ரொம்ப தெளிவா இருக்கேன். இனி சினிமாதான் என்னோட முதல் காதலன். இனி எனக்கு காதல் வந்தா அது தெளிவானதாக, நம்பிக்கையானதாக இருக்கும்.தயவுசெய்து மீடியாக்கள் என்னை இன்னும் டோனியோட இணைத்து எழுதாதீங்க. அவருக்கு கல்யாணமாயி சந்தோஷமா இருக்கார். எங்களுக்குள்ள நல்ல நட்பு இருக்கு. அதை காப்பாத்திக்கணும்''  என்று அனுபவ தத்துவம் பேசுகிறார் ராய் லட்சுமி..

0 comments:

Post a Comment