Tuesday, January 20, 2015


தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் நடித்த பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவிக்கு நேற்று அவருடைய பிறந்த ஊரில் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலையை அவருடைய மகன் சென்னாராவ், தனது தாயாரின் சொந்த ஊரான பெட்டாபுரம் என்ற இடத்தில் நேற்று திறந்து வைத்தார். இந்த சிலை திறப்பு விழாவிற்கு தெலுங்கு நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

லவகுசா படத்தில் சீதை'வாக நடித்து தமிழ், தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை அஞ்சலிதேவி நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமராவ் ஆகியோர்களுடன் இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ள நடிகை அஞ்சலி, "அன்னை ஓர் ஆலயம்" படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அம்மாவாகவும், "காதல் பரிசு" படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார்.

மேலும் நடிகை அஞ்சலிதேவி பரதேசி, ஸ்வர்ண சுந்தரி, ஸ்வர்ண மஞ்சரி, சண்டிப்பிரியா போன்ற ஒருசில படங்களை தயாரித்துள்ளார். ஆதிநாராயணராவ் என்ற இசையமைப்பாளரை கடந்த 1940ஆம் ஆண்டு திருமாணம் செய்த அஞ்சலிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் இணைந்து அஞ்சலி பிக்சர்ஸ் என்ற பெயரில் தெலுங்கு மொழியில் திரைப்படங்கள் தயாரித்து வருகின்றனர். அஞ்சலிதேவியின் பேத்தி சைலா ராவ் அவர்களும் ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. 

1927ஆம் ஆண்டில் பிறந்த அஞ்சலிதேவி தனது 86வது வயதில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி மரணம் அடைந்தார்.

0 comments:

Post a Comment