
விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கி வரும் 'புலி' படத்தின் குழுவினர் தற்போது ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இந்த பகுதியில் இன்னும் பத்து நாட்களுக்கு படப்பிடிப்பு இருக்கும் என்றும், இங்கு படத்தின் ஒருசில முக்கிய காட்சிகளை சிம்புதேவன் படப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
கடப்பாவை அடுத்து சென்னையிலும், அதன்பின்னர் கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அடுத்தடுத்த கட்டங்களில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 'புலி' படத்திற்காக அற்புதமான டியூன்களை போட்ட தேவிஸ்ரீ பிரசாத்துக்கு படத்தயாரிப்பாளர் தங்க மோதிரம் பரிசு வழங்கியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை பி.டி.செல்வகுமார் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இவ்வருடம் கோடை விடுமுறையில் இந்த படம் வெளிவரும் என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment