Monday, January 19, 2015


கற்க கசடற படத்தில் தமிழுக்கு வந்த ராய்லட்சுமி, கடந்த 9 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 படங்களில் நடித்து விட்டார். அந்த வகையில் தென்னிந்திய 
சினிமாவில் நன்கு பரிட்சயமான நடிகையாகி விட்டார். அதேபோல் அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் சிங்கிள் ஹீரோயின் இல்லையென்றாலும் மூன்று ஹீரோயின்களில் ஒருவராகவாவது நடித்து விட்டார்.

ஆனபோதும், ராய் லட்சுமிக்கென்று ஒரு ஸ்டெடியான இடம்தான் இன்னும் எந்த மொழியிலும் கிடைக்கவில்லை, இந்த நிலையில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்ட ராய் லட்சுமிக்கு, மேல்தட்டு ஹீரோக்களின் படங்களில் முக்கிய கேரக்டர் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால், இரண்டாவது இன்னிங்சில் நயன்தாரா பாணியில் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்து மார்க்கெட்டை தக்க வைத்துகொள்ள வேண்டும் என்று தற்போது தீவிரம் காட்டி வருகிறார் ராய் லட்சுமி.

அந்த வகையில், விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு என சில வளர்ந்து வரும் ஹீரோக்கள் நடிக்கும் பட டைரக்டர்களை சான்ஸ் கேட்டு துரத்துகிறார் ராய்லட்சுமி. ஆனால், அவருடன் நடிப்பதற்கு மேற்படி ஹீரோக்கள் தயாராக இருந்தபோதும், 33 வயதான முத்தின நடிகையைப்போய் எப்படி இளவட்ட நடிகர்களுடன் நடிக்க வைப்பது என்று இயக்குனர்கள் தயங்குகிறார்கள். அதனால் ராய்லட்சுமியின் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்து கொண்டிருக்கிறது.

0 comments:

Post a Comment