எங்கு சென்றாலும் மக்கள் தனது தந்தை கமல் ஹாஸன் பற்றி கேட்பதாக ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி லக் இந்தி படம் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு அவர் தெலுங்கு படத்தில் நடித்தார். 7 ஆம் அறிவு படம் மூலம் கோலிவுட் வந்தார். ஸ்ருதி தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தில் ஸ்ருதி ஹாஸன் உள்ளார். அந்த படத்தில் அவர் விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலும் பாடுகிறார்.
என் தந்தையை பற்றி என்னிடம் பிறர் கேட்கையில் என்ன சொல்வது என்று எனக்கு பல நேரம் தெரியாது. எனக்கு தெரியவில்லை, அவரிடமே கேளுங்கள் என்று தெரிவித்துள்ளேன் என்று ஸ்ருதி கூறினார்.
இந்தி நடிகர் ரிஷி கபூரிடம் மக்கள் இன்றும் அவரது தந்தை பற்றி கேள்வி கேட்கிறார்கள். ரிஷி கபூரிடம் இன்றும் அவரது தந்தை பற்றி கேட்கையில் நான் என் தந்தை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க பழகிக் கொள்ள வேண்டும் என்றார் ஸ்ருதி.
என் தந்தையை நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது. அவரது மகள் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது என்று ஸ்ருதி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment