Monday, January 12, 2015



சென்னை: அஜீத் தனது கர்ப்பமான மனைவியுடன் நேரத்தை செலவிட இரண்டு மாதம் பிரேக் எடுக்க உள்ளாராம். அஜீத், ஷாலினி தம்பதிக்கு அனௌஷ்கா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஷாலினி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். 

கௌதம் மேனனின் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் அஜீத். படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவித்தனர். பின்னர் என்னவென்றால் படம் வரும் 29ம் தேதி தான் ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.

இதையடுத்து அவர் பொங்கல் பண்டிகை முடிந்ததும் சிறுத்தை சிவாவின் படத்தில் நடிக்கத் துவங்குவார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் நேரத்தை செலவிட இரண்டு மாத காலம் பிரேக் எடுக்கிறாராம். 

இதனால் சிவாவின் படப்பிடிப்பு தள்ளிப் போகிறது என்று கூறப்படுகிறது. முன்னதாக ஆரம்பம் படத்தில் நடிக்கையில் அஜீத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு அவர் இன்னும் அறுவை சிகிச்சை செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை இந்த குட்டி பிரேக்கில் அவர் அறுவை சிகிச்சையும் செய்து கொள்வாரோ?

0 comments:

Post a Comment