Monday, January 12, 2015

”இது நம்ம ஆளு’ டீசர் வருதுன்னு சொன்னதுக்கே இப்படி டிரெண்ட் பண்றீங்க…என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா,”
‘இது நம்ம ஆளு’ படத்தின் டீசர் பொங்கலுக்கு வருவதைப் பற்றிய செய்திக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பிற்காக சிம்பு செய்த டிவீட் தான் இது.
இப்படிச் சொல்லி விட்டுப் போனவர்கள் தான் அண்ணன் சிம்புவும், தம்பி குறளரசனும்.
பொங்கலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இன்னும் டீஸருக்கான பின்னணி இசையையே கொடுக்கவில்லையாம் சிம்புவின் அன்புத் தம்பியும் அப்படத்தின் இசையமைப்பாளருமான குறளரசன்.
இது நம்ம ஆளு படம் 2013-ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது. பாண்டிராஜ் இயக்கிய படங்களிலேயே அதிக நாட்களாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கும் ஒரே படம் இது மட்டும் தான். இந்தப்படம் மட்டும் கமிட்டாகவில்லை என்றால் இதற்குள் மூன்று படங்களை இயக்கி அதை ரிலீசும் செய்திருப்பார்.
ஆனால் சிம்புவுக்கு எல்லாரும் ஒன்று தானே? படம் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை பல பஞ்சாயத்துகள். எல்லாவற்றையும் தாண்டி ஒரு வழியாக படத்தை முடித்து விட்டார் பாண்டிராஜ்.
இன்னும் பாடல்காட்சிகள் மட்டுமே பாக்கி. தம்பி குறளரசன் பாடல்களை போட்டுக்கொடுத்தால் தான் பாக்கி வேலையை முடிக்க முடியும். அவரும் அண்ணன் கூட சேர்ந்து கொண்டு வெளிநாடுகளுக்கு ஊர் சுற்றப் போய் விட்டாராம்.
கடுப்பான பாண்டிராஜ் சிம்புவின் ட்விட்டுக்கு போட்ட பதில் ட்விட் என்ன தெரியுமா?
“இது நம்ம ஆளு டீசர் பொங்கலுக்கு வருது, ஆனால் பின்னணி இசை இன்னும் வரலை..என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… @சிலம்பரன், @குறளரசன்,” என்பது தான் அவர் போட்ட பதிலடி ட்விட்.
சிம்பு, குறளரசன் இரண்டு பேருமே பாண்டிராஜின் இந்த நக்கலான ட்விட்டுக்கு எந்த பதிலும் தரவில்லை. டீசரும் ரெடியாகவில்லை.
சொன்னா கேட்கிற சமத்துப் புள்ளைங்களா அண்ணனும் தம்பியும்..?


0 comments:

Post a Comment