Tuesday, January 13, 2015

அம்புலி 3டி, ஆ படங்களின் வெற்றிகளை தொடர்ந்து இயக்குனர் இரட்டையர்கள் ஹரி-ஹரீஷ் இயக்கும் புதிய படம் ஜம்போ 3டி.
கோகுல் இந்தப் படத்தில் நாயகன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் சுகன்யா, பேபி ஹம்சிகா, அஞ்சனா, லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ மற்றும் 'கும்கி' அஷ்வின் ஆகியோர் நடித்துள்ளனர். எம்.எஸ்.ஜி மூவீஸ் சார்பில் ஜி.ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதாநாயகி அஞ்சனா கீர்த்தி தனது ஜம்போ அனுபவத்தை கூறுகையில் “இப்படத்தில் வேலை செய்தது பல அருமையான அனுபவங்களை தந்தது. இயக்குனர்கள் ஹரி- ஹரீஷ் உடன் பணிபுரிவது மிக இனிதான ஒன்றாய் அமைந்தது. இவர்கள் இருவரும் வேகமாகவும், விவேகமாகவும் வேலை செய்ய கூடியவர்கள்.“
"படத்தில் ஒரு காட்சியில் நான் ஜப்பான் பதுமையாக நடிக்க வேண்டியிருந்தது. எனக்கு கண் இமைக்காமல், சலனமற்ற பொம்மையாக அசைவில்லாமல் நடிக்க சொல்லி கொடுத்தார். மேலும், அழகிய பேபி ஹம்சிகா இப்படத்தில் முக்கியமான கதாப்பதிரத்தில் நடித்திருக்கிறார்.”
“படத்தின் 90% ஜப்பானின் டோக்யோ, டோயாமா நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. டோக்யோ தமிழ் சங்கத்தினர் எங்களை கனிவாய் வரவேற்னர். ஒரு நாள் தனியாக ஷாப்பிங் சென்றபொழுது ஜப்பானிய மொழியில் எழுதிய விலாசத்தை தொலைத்துவிட்டேன். ஒரு ஜப்பானிய டாக்சி ஓட்டுனர் எனக்கு உதவி புரிந்தார். நான் இந்தியாவை சேர்ந்தவள் என்றவுடன் ரஜினிகாந்தை பற்றி பேசினார். தமழிலும் பேசினார்.”
“ஜப்பானிய நடிகர் நடிகைகளுடன் நடித்தோம். ஜப்பான் பத்திரிக்கைகளில் எங்களை பற்றி செய்திகள் வந்தது மிகவும் பெருமையாக இருந்தது. நகைச்சுவைமிக்க 3டி படமாய் உருவாகி வரும் இப்படம் குழந்தைகளை மிகவும் கவரும்.” என கூறினார் அஞ்சனா.

0 comments:

Post a Comment