Wednesday, January 14, 2015


மலையாளத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. மோகன்லால் நடித்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் அன்ஷிபா. தற்போது தமிழில் ‘பரஞ்ஜோதி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்போதுதான் திரையுலகுக்குள் தலைநீட்டி இருக்கும் அன்ஷிபாவுக்கு இணைய தள குறும்பர்கள் ஷாக் கொடுத்திருக்கின்றனர்.
ஆபாசமாக நீச்சல் உடை அணிந்திருப்பது போன்ற அன்ஷிபாவின் படங்கள் இணையதளத்தில் பரப்பிவிடப்பட்டிருக்கிறது. இதையறிந்து ஷாக் ஆனார் அன்ஷிபா. அவர் கூறும்போது, ‘ஒருபோதும் நான் இணைய தளத்தில் வெளியாகி இருக்கும் எனது போட்டோவில் இருப்பதுபோல் ஆபாசமாக உடை அணிந்தது கிடையாது. இதுபற்றி விவாதிக்கவும் எனக்கு ஆசை இல்லை என பதிலளித்துள்ளார்.
ஆனால், திரைப்படத்தில் நடிக்கும் முன் சில குறும்படங்களில் நடித்துள்ளார். அந்த குறும்படங்களில் நீச்சல் உடை, பெட் ரூம் என தாரளமாக நடித்துள்ளார். இந்த குறும்படத்தை வைத்துதான் பெரிய திரைக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இணையத்தில் அவர் நடித்த எந்த குறும்படமும் இடம்பெறவில்லை. இது யாரோ சில குறும்பர்களின் வேலையாகத்தான் இருக்கும் எனக் கருதப்படுகின்றது. 



0 comments:

Post a Comment