அமிதாப் பறக்கவிட்ட ஷமிதாப் பட்டம்
அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் நடிப்பில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவுள்ள 'ஷமிதாப்' படத்தின் புரமோஷன் நேற்று முதல் ஆரம்பமானது. தமிழகத்தில் பொங்கல், ஆந்தராவில் சங்கராந்தி கொண்டாடுவது போல் வட மாநிலங்களில் மகர சங்கராந்தி கொண்டாடுவது வழக்கம். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் மகர சங்கராந்தி விழாவில் கலந்து கொண்ட அமிதாப்பச்சன், அங்கு பட்டம் விட்டு ஷமிதாப் படத்தின் புரமோஷனை ஆரம்பித்து வைத்தார். அவருடன் தனுஷ் மற்றும் அக்ஷராஹாசனும் இருந்தனர்.
இந்த படத்தின் அடுத்த கட்ட புரமோஷன் பணிகள் டெல்லி, கொல்கத்தா, சென்னை, லண்டன் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளதாகவும், அமிதாப், தனுஷ், அக்ஷாராஹசன் உள்பட அனைவரும் புரமோஷனில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பால்கியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தை போலவே தனுஷின் இரண்டாவது இந்தி படமான ஷமிதாப்பும் ரூ.100 கோடி கிளப்பில் சேர நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

0 comments:
Post a Comment