Monday, January 12, 2015

aneganதனுஷ், கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் அனேகன். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் வேலைகள் அனைத்தும் எப்போதோ முடிந்து விட்டது.
தீபாவளிக்கே ரிலீஸாக வேண்டியது. ஆனால் விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய படங்கள் ரிலீஸானதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். அதன் பிறகு டிசம்பர் மாதம் ரஜினியின் லிங்கா ரிலீஸானதால் மீண்டும் தள்ளி வைத்தனர். பொங்கலுக்கு ஐ, என்னை அறிந்தால், ஆம்பள படம் ரிலீஸாகும் என்று அறிவித்தனர்.
இதனால் ஜனவரி மாதம் இறுதியில் ரிலீஸாகும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் திடீரென பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த படம் ஜனவரி 29ம் தேதிக்கு மாற்றப்பட்டது. பெரிய நடிகர்களின் படம் ரிலீஸாவதால் தொடர்ந்து தள்ளி போய் கொண்டிருந்த அனேகன் படம் தற்போது பிப்ரவரி 13ம் தேதி ரிலீஸாகும் என்று படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் அறிவித்துள்ளார். தனுஷ் இந்தியில் நடித்துள்ள ‘ஷமிதாப்’ படமும் பிப்ரவரி 6-ந் தேதி வெளியாகவிருக்கிறது குறிப்பிடதக்கது.


0 comments:

Post a Comment