ஸ்ருதிஹாசனின் பொங்கல் கொண்டாட்டம்
உலக நாயகனின் வாரிசான ஸ்ருதிஹாசன் இன்றைய பொங்கல் திருநாளை மும்பையில் உள்ள தனது வீட்டில் கொண்டாட இருப்பதாக கூறியுள்ளார். ஒவ்வொரு வருடமும் தவறாமல் தன்னுடைய விசாலம் ஏகாம்பரம் வீட்டில் பொங்கல் கொண்டாடியதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமாவில் பிசியாக உள்ளதால் தன்னால் அங்கு செல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
விசாலம் பாட்டியின் சர்க்கரை பொங்கல், வாழை இலை சாப்பாடு, அம்மியில் அரைத்த மசாலாவில் செய்த சாம்பார், பீன்ச் பொறியல், உருளைக்கிழங்கு பொறியல் ஆகிய உணவுக்கு ஈடு இணை உலகில் எந்த சாப்பாடும் இல்லை என்றும், கடந்த சில வருடங்களாக பாட்டியின் உணவை மிஸ் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறுவயதில் இருந்தே தீபாவளி மட்டும் கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களை மட்டும் கொண்டாடி வந்ததாகவும், சினிமாவுக்கு வந்த பின்னர்தான் பொங்கல் திருநாளை கொண்டாடி வருவதாகவும் ஸ்ருதி கூறியுள்ளார்.
சிறுவயதில் தான் பார்த்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தன்னுடைய கண்முன்னே நிற்பதாகவும், ஜல்லிக்கட்டை மீண்டும் பார்க்க மாட்டோமா? என்று ஏங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment