சிம்புவின் வாலு'க்கு சென்சார்
கடந்த பல வருடங்களாக தயாராகிவந்த சிம்புவின் 'வாலு' ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 'வாலு' படம் சென்சாருக்கு சென்றுள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் சென்சார் ஆகி வந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான நிக் ஆர்ட்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை சிம்புவும் தனது சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். சிம்பு, ஹன்சிகா,சந்தானம், விடிவி கணேசன், பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஷக்தி ஒளிப்பதிவு, சுரேஷ் எடிட்டிங்கும் செய்துள்ளார்.
சென்னையில் உள்ள ரயில்வே குவார்ட்டர்ஸில் வசிக்கும் சிம்பு மற்றும் ஹன்சிகாவின் காதல் குறித்த கதையை நகைச்சுவையுடன் கூறியுள்ளதாக இயக்குனர் விஜய்சந்தர் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையேதான் சிம்பு மற்றும் ஹன்சிகாவுக்கு உண்மையான காதல் ஏற்பட்டு அதன் பின்னர் பிரேக் அப் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment