Monday, January 12, 2015

கவுண்டமணி, செந்தில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தனர். அதன் பிறகு விவேக். வடிவேலு என்ட்ரிக்கு பிறகு அவர்களது சான்ஸ் பறிபோனது. சந்தானம் என்ட்ரிக்கு பிறகு வடிவேலுக்கு மார்க்கெட் டல்லடித்தது. இந்த நிலை டோலிவுட்டிலும் தொடர்கிறது. தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் இல்லாமல் எந்தவொரு படமும் வெளியாகாது என்ற நிலை கடந்த 2 ஆண்டுக்கு முன்வரை நிலவியது. புது இயக்குனர்கள், புது ஹீரோக்கள் என்ட்ரிக்கு பிறகு காமெடியன்களும் நிறையபேர் என்ட்ரி ஆகி உள்ளனர். புதிதாக வருபவர்கள் பிரம்மானந்தத்தை தவிர்த்துவிட்டு வேறு காமெடி நடிகர்களை ஒப்பந்தம் செய்கிறார்கள்.

 பிரம்மானந்தத்தை ஒப்பந்தம் செய்தால் அவருக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்க வேண்டும் என்ற பயமும் இதற்கு ஒரு காரணம். நிற்க நேரமில்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டிருந்த பிரம்மானந்தம் சமீபகாலமாக பல நாட்கள் வேலை இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய நிலை உள்ளதாக டோலிவுட்டில் விமர்சனம் எழுந்துள்ளது. அவரே சில இயக்குனர்களுக்கு தொடர்பு கொண்டு வாய்ப்பும் கேட்கிறாராம். இந்த மார்க்கெட் வீழ்ச்சி நிலையானது இல்லை. மீண்டும் ஒரு கட்டத்தில் பிரமானந்தம் ரீ என்ட்ரி கொடுத்து சக்கைபோடு போடுவார் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.


 டோலிவுட்டில் வாய்ப்பு தேடும் காமெடி நடிகர்

0 comments:

Post a Comment