‘என்னை அறிந்தால்’ படத்தின் இறுதிக்கட்ட ரீ ரெக்கார்டிங் பணிகளில் பிஸியாக இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்தின் மூலம் முதல் முறையாக ‘தல’ அஜித்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது, “பொதுவா ஒரு மாஸ் ஹீரோ தனது ரசிகர்களை கவரும் வகையில் இசையமைக்க சொல்லி கேட்பார் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அஜித் தனது ரசிகர்களுக்காக எந்தவித சமரசமும் செய்ய வேண்டாம் என ஆரம்பத்திலே சொல்லிவிட்டார். எனினும் கொண்டாட்ட மனநிலையில் படம் பார்க்க வரும் ரசிகர்களையும் ஏமாற்றாமால் என்னையும் முழுசாக மாற்றிக் கொள்ளாமல் வேலை பார்த்திருக்கிறேன்” என்றார்.
.jpeg)
0 comments:
Post a Comment