இன்றைய இளம் நட்சத்திரங்கள் மட்டும்தான் சாதனை படைக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். தமிழ் சினிமாவில் பல சாதனைகளைப்
புரிந்த கமல்ஹாசனும் இன்றைய இளைஞர்களுக்குப் போட்டியாக பல புதிய விஷயங்களை செய்து வருகிறார். காலத்திற்கேற்றபடி தன்னை மாற்றிக் கொண்டு வருவதால்தான் இத்தனை வருடங்களாக அவரால் திரையுலகில் தாக்குப் பிடித்து இருக்க முடிகிறது.
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடிக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன் 13ம் தேதி வெளியிடப்பட்டது. இரண்டே நாட்களில் அந்தப் படத்தின் டிரைலர் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.
படத்தின் டிரைலரே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல பல வித்தியாசமான தோற்றங்களில் கமல்ஹாசன் நடிக்கும் படம், கூடவே அவருடைய குருநாதர் கே.பாலசந்தர், பல சாதனைப் படங்களைக் கொடுத்த இயக்குனர் கே.விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
கமல்ஹாசன் நடித்து இந்த ஆண்டு மூன்று படங்கள் வெளி வர உள்ளது, அதில் முதல் வெளியீடாக 'உத்தம வில்லன்' வெளிவர உள்ளது.
Saturday, January 17, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment