Sunday, January 18, 2015



மெட்ராஸ் படத்தை அடுத்து கார்த்தி நடித்துள்ள 'கொம்பன்' விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் கார்த்தியின் அடுத்த படமான 'காஷ்மோரா' படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ள நிலையில் ஸ்ரீதிவ்யாவும் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நயன் தாராவும், ஸ்ரீதிவ்யாவும் நடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒரே படத்தில் நயன்தாராவும் ஸ்ரீதிவ்யாவும் நடிக்கவுள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். 

0 comments:

Post a Comment