Saturday, January 17, 2015



சமூக வலைத்தளத்தில் எப்பொழுதுமே சர்ச்சைகளை கிளப்பி வருவதையே பார்ட் டைம் தொழிலாக வைத்திருக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்து சிரஞ்சீவி ரசிகர்களை காயப்படுத்தியுள்ளார்.

சிரஞ்சீவியின் 150வது படமும், பவண்கல்யாண் நடிக்கும் அடுத்த படமும் ஒரே நாளில் வெளிவந்தால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக ஒரு பதிவில் அவர் கூறியுள்ளார். மேலும் அமீர்கானின் 'பிகே' வெற்றிக்கு சிறந்த கதை, சிறந்த இயக்குனர் தேவை. ஆனால் பவன்கள்யானின் வெற்றிக்கு எதுவுமே தேவையில்லை. அவருக்கு சிறப்பான அறிமுக காட்சி இருந்தாலே போதும் படம் வெற்றி பெற்றிவிடும் என்று கூறியுள்ளார்.

எனவே அமீர்கானை விட உண்மையான பிகே' என்றால் அது பவன்கல்யாண்' தான் என்று தாம் நம்புவதாக கூறியுள்ளார்.

பவன்கல்யாணை எப்போதுமே ராம்கோபால் வர்மா ஆதரித்துதான் பேசுவார்.அதே நேரத்தில் சிரஞ்சீவியை அவர் வம்புக்கிழுப்பது அடிக்கடி நடப்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment