ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொங்கலுக்கு வெளியான 'ஐ' படம், அனைத்து ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு நலமாக வீடு திரும்பினார்.
தன்னுடைய தாயாருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி கடன் செலுத்தியுள்ளார்.
அவர் சொந்த செலவில் ஐ பட டிக்கெட் எடுத்து கொடுத்து அனைவரையும் பொங்கல் அன்று படம் பார்க்க வைத்துள்ளார். தாய் மேல் அவர் வைத்துள்ள பாசத்தையும், நன்றி மறவா பண்பையும் இது தெளிவாக எடுத்து காட்டுகிறது.
0 comments:
Post a Comment