Saturday, January 17, 2015



நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ஸ்ரீதேவி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இங்கிலீஷ் விங்கிலீஷ்' கொடுத்த வெற்றி உற்சாகத்தினால் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள ஸ்ரீதேவி, தற்போது விஜய்யின் புலி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் ஸ்ரீதேவி ஹீரோயினியாக நடிக்கவுள்ளார். வளர்ப்பு மகளுக்கும் தாய்க்கும் இடையே நடைபெறும் பாசப்போராட்டம்தான் கதையின் முக்கிய கரு.

இந்த படத்தில் தாயாக ஸ்ரீதேவியும், வளர்ப்பு மகளாக கமலின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசனும் நடிக்கவுள்ளனர். ஏற்கனவே பாலிவுட்டில் அமிதாப், தனுஷுடன் 'ஷமிதாப்' படத்தில் அறிமுகமான அக்ஷராவுக்கு இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment